குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது! ஜனாதிபதி தெரிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால சூழல் இனியொருபோதும் தோற்றம் பெறாது என்றும் 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை  சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply