சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று காலை விசரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.