அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன் இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது.
குறித்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், 63 வயது வரை சேவையாற்ற வாய்ப்பு உள்ளது.
அதன்படி, விசேட வைத்திய நிபுணர்கள், அனைத்து தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் சுகாதார நிபுணர்கள், அனைத்து பல் சுகாதார நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக நீட்டிக்கப்படும்.
இதற்கு முன்னர் 65 வயதிலிருந்த கட்டாய ஓய்வை 2022 ஆம் ஆண்டு 60 வயதாக கடந்த அரசாங்கம் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.