ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

கல்கிசையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புக்களின் போதே கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட மற்றும் கட்டுகுருந்துவத்தை ஆகிய பிரதேசங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கல்கிசை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவர்.

மூன்று சந்தேக நபர்களிடம் இருந்தும், 10 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயின் , 05 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 06 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply