இந்திய எண்ணெய் குழாய் அமைப்பு- அராசங்கத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply