
கோல்மார்வல் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
அதாவது கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற “லங்கா ரி 10 சூப்பர் லீக்” கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரேம் தக்கர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரேம் தக்கர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே , பிரேம் தக்கரை 05 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பிரேம் தக்கருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.