வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்து இன்று (20) வவுனியா நீதிமன்றில் முன்னிலை படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
15 இலட்சம் ரூபாய் காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரையும் அவரது பிரத்தியேக செயலாளரையும் நேற்று (19) மாலை மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20) காலை கைது செய்யப்பட்டார்.
குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் 3 இலட்சம் ரூபாய் பணத்தினை முறைப்பாட்டாளருக்கு செலுத்திய நிலையில், குறித்த இருவரையும் சரீர பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.