
மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (21) மியன்மார் அகதிகளை சந்தித்தார்.
மியன்மார் அகதிகள் திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.