பெண்ணுக்கு கொலை மிரட்டல்- இருவர் கைது!

பெண் ஒருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த 4ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போதே குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (22) காலை கிரிபத்கொடை, தலுகம பிரதேசத்திலும், பேலியகொடை, பட்டிய சந்தி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply