ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கையளிப்பு!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்று பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரசுரித்தமை தொடர்பில், பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் ‘கலாநிதி’ என்று குறிப்பிடப்பட்டதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற இணையதளத்தில் தரவுகள் உள்ளிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினராக ஹர்ஷன நாணயக்கார பெயரிடப்பட்டு, அவருடைய பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் பாராளுமன்றத்தின் மூன்று அதிகாரிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply