மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று (23) குறித்த இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி லேனதிவுள்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பயிர்செய்கை நிலத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நபர் வீட்டுக்கு வராத நிலையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் பொலிஸார் அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேடுதல் நடத்திய போது கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.