
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர்கள் சபை நடாத்தும் மார்கழி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மார்கழி பெருவிழாவை ஒட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பழனி ஆதின குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதின முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் அம்பலவாணர் அருள் வழிபாடு நடைபெற்று பின்னர் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.