இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனையுடன், 1500 ரூபாய் அபராதத்தையும் விதித்து இன்று உத்தரவிட்டிருந்தது.
அந்த தண்டனைக்கு எதிராக தேரர் மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை மனுவை சமர்ப்பித்திருந்தனர்.
எனினும், தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்துள்ளார்.