இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.