துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்!

அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன் 800 முதல் 1000 வரையிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (9) ஊடக சந்திப்பொன்றை நடத்தி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, சாரதிகள் சுமார் ஒரு வாரமாக துறைமுகத்திலேயே தங்க வேண்டியுள்ளதாக சனத் மஞ்சுள கூறினார்.

அத்துடன், கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply