அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை விட அதிகமாக விலையை அதிகரிக்க முடியாது என்றும், விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற வேண்டும் என்றும் கூறிய அவர், இவ்விரண்டு விடயங்களையும் கருத்திற்கொண்டு நெல் மற்றும் அரிசிக்கான விலைகளை வர்த்தமானியில் வெளியிடத் தயாராக இருப்பதாக கூறினார்.