ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின் சாங்டு பிராந்தியத்தில் உள்ள பல மின் உற்பத்தி தொழிற்சாலைகளைப் பார்வையிட உள்ளார்.

அதன்பின், வறுமை ஒழிப்புக்கான மாதிரி கிராமம் ஒன்றைப் பார்வையிடவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களை (Wang Xiaohui) சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய விஞ்ஞான மற்றும் விவசாய, தொழில்நுட்ப நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply