
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும், பொது மக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (17) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அண்மித்த பகுதியாகிய வெள்ளைப்பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் முதலை சஞ்சரித்து செல்லும் காட்சி அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.