யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பமான தேசிய தைப்பொங்கல் விழா!

2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடாத்துவதற்கு புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில், இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா தெல்லிப்பளையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து இந்த நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தேசிய தைப்பொங்கல் விழாவின் கலைநிகழ்வுகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெறும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தேசிய பொங்கல் விழாவை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழப்பாணம் மாவட்ட செயலகம், தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதிப்புக்குரிய ஜனாதிபதி அனுராகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேசிய தைப்பொங்கல் விழா இன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில், சைவ பெரு மக்களின் கொடியாக கருதப்படுகின்ற நந்தி பெருமானின் கொடிகள் சகிதம் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் முதல் அங்கமாக, பாரம்பரிய நடைமுறைகளோடு கூடியதாக மங்கள வாத்தியங்கள் சகிதம் விருந்தினர்கள் பொங்கல் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, பொங்கல் பொங்கி விழாவை சிறப்பாக ஆரம்பித்திருந்தனர்.

இன்றைய நிகழ்வின் அதிதிகளாக,
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர்
கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி சரோஜா போல்ராஜ் தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.இளங்குமரன், மருத்துவர் சிறி பவானந்தராஜா முதலானோர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன்
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோபன் மாவட்ட செயலாளர்களான ம. பிரதீபன்
மன்னர் மாவட்ட செயலாளர் சிறி கனகேஸ்வரன்
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா
தெல்லிப்பளை பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் உட்பட பல முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இந்த தேசிய பொங்கல் நிகழ்வானது முன்னெக்கப்படுள்ளமையானது வரவேற்கத்தக்க விடயமாக உள்ளதுடன் மத நல்லிணக்கதையும், சமூக நல்லிணக்கதையும் உருவாக்குதற்கான அடிப்படை அம்சமாகவும் நோக்க முடிகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply