மவுஸ்ஸாகலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து- 8 வீடுகள் எரிந்து நாசம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply