
அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடாத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கைதாகி விடுதலையான முன்னாள் தமிழீல விடுதலை புலிகளை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்த சந்தேக நபர்கள் மெகசின் சிறைச்சாலைக்குள் வைத்து திட்டம் தீட்டியுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது.
அறுகம்பே விவகாரத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.