சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக் கொண்ட லொறியைப் பயன்படுத்தியதாக கூறி நேற்று (19) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.