தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் காட்டு தீ பரவி வரும் நிலையில் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தபோதைய சூழ்நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் பதிவாகவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன், தீப்பரவலில் சிக்குண்டு மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தென் கிழக்கு பகுதியிலிருந்து இதுவரை 23,000க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply