இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்- இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளத்துடன், இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வௌிவிவகார செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply