
ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.
குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குறித்த இரண்டு அணிகளும் 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 21 முறை சென்னை அணியும், 11 முறை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.