ஈகைத் திருநாள் இன்று!

முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (Arabic: عيد الفطر ஈதுல் ஃபித்ர்) என்பது இஸ்லாமிய இரு பெரும் திருநாட்களில் ஒன்றாகும். இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(10) நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.

ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாமிய சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையையம் நோன்பு உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அணைத்து முஸ்லீம் மக்களுக்கும் கலைக்கதிர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்!

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply