தமிழக மீனவர்கள் தொடர்பில் மோடி எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் இன்று (07) நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை.

97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே.

மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது.

மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம் என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply