சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த வரி கொள்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரி கொள்கையே 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125% ஆக உயர்த்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சீனப் பொருட்களுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாதம் 2ஆம் திகதி 20 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார்.

அதன்பின்பு, பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை சீன மீது விதித்தார்.

இதனால் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார்.

இதன்மூலம் சீனாவில் இருந்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது.

இந்த வரிவிதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.

இதற்கும் அசராத சீனா, மேலும் 50 சதவீத வரியுடன் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 84 வீதமாக அதிகரிப்பதாக நேற்று அறிவித்தது.

அத்துடன், அமெரிக்க இராணுவத்திற்காக பணிபுரியும் இரண்டு நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு இரட்டை பயன்பாட்டு பொருட்களை விற்க சீனா தடை விதித்துள்ளது.

இந்த நிலையிலேயே சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply