இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி சமர்!

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடாத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவமும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply