புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று- தேசிய துக்க தினம் பிரகடனம்!

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று (26) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதித் திருப்பலியை, கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடாத்தவுள்ளார்.

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கு அமைய, அவரது உடல் ரோமில் உள்ள புனித மரியா மேஜியோரே பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை நடைபெறும் இன்றைய தினமானது தேசிய துக்க தினமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply