காஷ்மீர் தாக்குதல்- இந்தியப் பிரதமரின் விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்குவதற்கு இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எப்போது, ​​எங்கு தாக்குதல்களை நடாத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புது டெல்லியில் நேற்று நடைபெற்ற விசேட தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதில் இந்திய இராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அதாவுல்லாவின் X கணக்கில் உள்ள ஒரு பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்தவொரு இராணுவ தாக்குதலுக்கும் உறுதியுடனும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply