
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு தரத்தை உயர்த்துவதற்காக முன்னாள் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஶ்ரீதரை 10 நாள் திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் நியமித்துள்ளது.
இந்த மாதம் 07ஆம் திகதி முதல் இந்த பயிற்சி திட்டம் ஆரம்பமாகின்றது.
இதில் ஆண்கள் மற்றும் மகளிர் தேசிய அணிகள் உட்பட தேசிய, உயர் செயல்திறன் மற்றும் கழக பயிற்சியாளர்களுடன் இணைந்து ஶ்ரீதர் பணியாற்றவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.