
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது.
குறித்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீதமுள்ள ஏனைய ஐபிஎல் போட்டித் தொடர் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.