
IPL போட்டியின் Play Off சுற்றில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விளையாடுவார் என குஜராத் டைட்டன்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி மே 30ஆம் திகதி முதல் பங்கேற்கவுள்ளதால், ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் Quetta Gladiators அணிக்காக விளையாடிவந்த குசல் மெண்டிஸ், குறித்த தொடரின் கடைசிப் போட்டியகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.