உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்வு: 17.22 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,722,276 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 78,302,764 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 55,074,271 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 106,055 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்தசூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,83,05,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,50,75,748 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,15,07,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,045 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir