கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து வீசா விண்ணப்பதாரிகளும் ஜூன் 1மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/
அத்துடன் உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய வீசா கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 07ஆம் திகதிக்கும் ஜூன் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காலவதியாகும் எல்லா வீசாக்களுக்கும் தண்டப்பணம் அறிவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.