517 பேர் சிகிச்சையில் – 116 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 260 இலிருந்து 321 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 847 பேரில் 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 517 நோயாளிகள் 07 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 116 பேரும், பொலனறுவை – வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 45 பேரும், கொழும்பு கிழக்கு – முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 85 பேரும், சிலாபம் – இரணவில வைத்தியசாலையில் 13 பேரும், மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 07 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை பொது வைத்தியசாலையில் 197 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 54 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 116 பேர் 25 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir