சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பெருந்தொகை வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் இவரை இந்த பதவிக்கு நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.சி. பேர்டினேன்டோ, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியதுடன் பல முக்கிய பதவிகளை வகித்தார்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று குடியேறிய அவர், நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்ததும் மீண்டும் நாடு திரும்பியதாக தெரியவருகிறது.