மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

 

தன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், மலாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய், 23, பெண் குழந்தைகளின் கல்விக்காக, பல முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த, 2012ல், தலிபான் பயங்கரவாதி இஸானுல்லா இஸான் நடத்திய தாக்குதலில், தலையில் குண்டு பாய்ந்து, மலாலா படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இவ்வளவு நடந்தும், மலாலா, தன் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. பெண் குழந்தைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இவரின் அந்த அர்ப்பணிப்பை கவுரவிக்கும் வகையில், நோபல் பரிசு, அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், மலாலா மீது தாக்குதல் நடத்திய இஸான், சமீபத்தில், ‘டுவிட்டர்’ வாயிலாக, மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதை சுட்டிக்காட்டி, மலாலா நேற்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: என் மீதும், பல அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்திய, தலிபான் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இஸான், தற்போது சமூக ஊடகம் வாயிலாக, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் சிறையில் இருந்து எப்படி தப்பித்தார்? பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவமும் அதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir