60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வழமையான பயன்பாட்டை, ஜேர்மனி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அரிதான குருதி உறைதல் அபாயம் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சுமார் 2.7 மில்லியன் பேர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 31 குருதி உறைதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தடுப்பூசியின் அபாயங்களைவிடவும், நன்மைகள் அதிகமுள்ளதென, சர்வதேச கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்துள்ளதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து விளக்கமளிப்பதற்காக, ஜேர்மனி அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir