விநாயகர் சிலைகள் விற்க அனுமதி பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை

மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ஒரு அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் புதிய சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் சதுர்த்திக்கு 5 நாட்கள் முன்பாக மதுரை காமராஜர் சாலை, அரசரடி, முனிச்சாலை, கீழமாசிவீதி, ஜெய்ஹிந்த்புரம், உழவர் சந்தைகள், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் பகுதிகளில் சிலைகள் விற்பனை செய்வோம்.இந்தாண்டு செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது.

செப்., 5 முதல் 10 வரை மேற்கண்ட இடங்களில் விநாயகர் சிலைகள் விற்க கலெக்டர் அனுமதி தரவேண்டும். அரசின் ஊரடங்கு விதிகளை கடைப்பிடித்து விற்பனை செய்வோம்.கொரோனா தடை உத்தரவால் பொம்மை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. 5 மாதங்கள் வருமானமின்றி தவிக்கிறோம். விநாயகர் சதுர்த்தியை நம்பி தயாரித்துள்ளோம். அனுமதி கொடுத்தால்தான் ஓரளவிற்கு கஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir