உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து பப்புவா நியூகினி, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது