டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டில், ஈ ஜீன் கரோலினால்  டிரம்ப்பிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே கடந்த செவ்வாயன்று, 3 மணித்தியால விவாதத்தின் பின்னர் 9 பேர் கொண்ட நடுவர் குழாமினால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

விசாரணையின்போது ஆஜராகாத டொனால்ட் டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தவில்லை என்றும் முன்னர் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், குறித்த வழக்கின் தீர்ப்பானது தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply