மேல்மாகாண அபிவிருத்திக்கான சுர்பானா ஜூரோங் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படும் எனவும், அதற்காகப் புதிய முகவர் நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே 14 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு மேல் மாகாணம் சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்குவதால், அதன் அபிவிருத்தியை முக்கியமானதாக மாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேல்மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக காணி விடுவிப்பு மற்றும் காணி சுவீகரிப்புத் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
T02