சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார்.

நாளை மே 31 ஆம் திகதி இவர் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீப கால மாற்றங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பல கலந்துரையாடல்களை ஒகமுரா நடத்துவார்.

பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதங்களும் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, அண்மையில், சர்வதேச நாணயத்தின் குழு ஒன்று வழக்கமான ஆலோசனைக்காக வந்து திரும்பியிருந்தது.

இந் நிலையிலேயே, ஒகாமுராவின் வருகை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply