கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது

கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷேட காவல்துறை அதிரடிப்படையினரால் நேற்று (01) இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை- 10ம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் முத்தலிப் மாஜித் (54வயது) என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தன்னுடைய நண்பர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அனுராதபுர சந்தியின் பார்சல் ஒன்று இருப்பதாக கூறியதாகவும் அதனை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் செல்லும் போது தன்னை கைது செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அக்போபுர காவல்துறை அதிரடி படையினருக்கு குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரிடம் கஞ்சாவை விற்பனைக்காக பெற்றுக் கொள்ளும் விதத்தில் விஷேட காவல்துறை அதிரடி படையினரின் தகவல் வழங்குனர்கள் ஊடாக கஞ்சா போதைப் பொருளை பெற்றுக்கொள்ளும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்திரிடம் ஒரு கிலோ பத்து கிரேம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply