விரைவில் பதிலடி – ரஷ்யாவிற்கு உக்ரைன் விடுத்துள்ள சவால்!

உக்ரைன் ரஷ்ய போர் 15 மாத காலமாக இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், பதிலடி தாக்குதலுக்கு தற்போது தாங்கள் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரை விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அந்நாட்டில் ஒளிப்பரப்பான வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நேர்காணலில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில்,

ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க நீண்ட காலமாக காத்திருந்த உக்ரைன், தற்போது பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் தாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “இது எவ்வளவு காலம் எடுக்கும் என்று தனக்கு தெரியவில்லை, எனவும் இந்த போராட்டம் பல்வேறு வழிகளில் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இந்த முறை தங்கள் நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது, ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவதை உக்ரைனிய ஆயுதப் படைகள் தொடர்ந்து வெற்றிகரமாக தடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கூடுதல் ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன்  உக்ரைன் ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து, பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்க முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply