நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற ‘தேசிய சட்ட மாநாடு 2023/2024’ இல் உரையாற்றிய ஜனாதிபதி , இளைஞர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் தேர்தல் மற்றும் அரசியலில் தொடர்பில் நம்பிக்கையை இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, தற்போது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் 50 சதவீதம் வாக்காளர்கள் இல்லை என்பதை எடுத்துரைத்த அவர், நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T02