வல்வெட்டித்துறையில் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு 

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு, வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினால் இயங்கும் இந்தப்படகானது, எதிர்காலத்தில் மீன்பிடித் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்களின் தேவை கருதி, தொழில்நுட்ப விடயங்களை உட்புகுத்தி உருவாக்கப்படுகின்ற கண்டுபிடிப்புகளின், நீடித்து நிலைக்கும் தன்மையைப் பொறுத்து, அவை பாவனையாளர்கள் மத்தியிலே அதிக வரவேற்பை பெறும்.

எதிர்காலத்தில், இந்த இயந்திரங்களினால், கடல் தொழிலாளிகளின் படகுத் தேவைகள்; பூர்த்தி செய்யப்படுமாயின், பாரிய எரிபொருள் பிரச்சினைகளில் இருந்து மீண்டு, அவர்கள், தமது தொழிலை இலாபகரமாக நடத்த இது உதவியாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த சூரிய சக்தியில் இயங்கும் படகு வெள்ளோட்டமானது, தமக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகக் கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply