நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல வர்த்தக பெண் திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிரியமாலிக்கு எதிராக, வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 8 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான திலினி பிரியமாலி நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து, சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்படி, வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பிரதிவாதியை ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குறித்த திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலைகுமாறு தெரிவித்துள்ளார்.